பாரத் பயோடெக் நிறுவன ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா

Must read

புதுடெல்லி:
பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கொரோனா வைரஸ் பரவிவரும் சூழலில், பல நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பு மருந்துக்கும், பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பு மருந்துக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுவரையில் 17 கோடி பேருக்கு இந்த நிறுவனங்களின் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

More articles

Latest article