சென்னை
தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர் உடலில் இருந்து பிளாஸ்மாவை எடுத்து அதை பாதிக்கப்பட்டோர் உடலில் செலுத்தி சிகிச்சை அளிப்பது பிளாஸ்மா சிகிச்சை ஆகும். இந்த முறை மூலம் உலகில் பலர் குணமடைந்துள்ளனர். இந்த சிகிச்சை முறை இன்னும் சோதனை வடிவில் உள்ளது.
தமிழகத்தில் கடந்த மே மாதம் இந்த சிகிச்சை முறை சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதற்கான வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த சிகிச்சை சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை சோதனை செய்ய ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்தது.
இந்த பிளாஸ்மா சிகிச்சை மூலம் 18 கொரோனா நோயாளிகள் குணம் அடைந்துள்ளனர். இந்த தகவலை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு மூத்த சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இவ்வாறு சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ள 18 பேரும் எவ்வித குறையும் இன்றி நலமுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.