ஸ்ரீநகர்: ஜம்மு பேருந்து நிலையத்தில் 7 கிலோ வெடிபொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர். அதன் 2ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஜம்மு புதிய பேருந்து நிலையத்தில் 7 கிலோ  வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டது.

நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் பேருந்து நிலையத்தில் வெடிபொருள்  கண்டெடுக்கப்பட்டதன் மூலம் மிகப் பெரிய தீவிரவாத செயல் முறியறிடிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு சோதனைகள் நடைபெற்று வருகிறது.