வாஷிங்டன்,

உணவு சாப்பிட்டுக் கொண்டே டி வி பார்ப்போருக்கு உடல்பருமன் பிரச்னை அதிகளவில் உள்ளது என  சமீபத்திய ஆய்வு  தெரிவிக்கிறது.

உடல்பருமன் பிரச்னை உலகளவில் இன்று இளம் வயதினரிடம் சகஜமாக பார்க்கமுடிகிறது.  Junkfood ஐ எனப்படும் துரித உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே டி வி பார்ப்போரிடம் இந்தப் பிரச்னை அதிகமாக காணப்படுகிறது.

இதனால் இளம்வயதினர் பலர் நீரிழிவு, ரத்த அழுத்தம், போன்ற நோய்களின் பிடியில் சிக்கியுள்ளனர்.

உடல்பருமன்  தொடர்பாக அமெரிக்காவில் உள்ள ஒஹியோ மாகாண பல்கலைக்கழகம் அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தியது. உடல் பருமனாக இருக்கும் 12 842 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில் அவர்கள் வாரத்தில் ஒருமுறைதான் வீட்டில் சமைத்த உணவை உண்பதாக கூறினர்.

இதேபோல் டி வியை அணைத்து விட்டு வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவோருக்கு உடல்பருமன் பிரச்னை மிகக் குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது.