டெல்லி: இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே மதமாற்றம் செய்வது அரசியல் சாசன மோசடி என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய பெஞ் ஒரு குறிப்பிடத்தக்க வழக்கின்  தீர்ப்பில், உண்மையான நம்பிக்கை இல்லாமல் இடஒதுக்கீடு பலன்களைப் பெறுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படும் மத மாற்றங்கள் “அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி” என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

புதுச்சேரியில் அப்பர் டிவிஷன் கிளார்க் பணிக்கு சான்றிதழ் கோரியபோது இந்துவாக பிறந்த கிறிஸ்தவ பெண் தனக்கு பட்டியலின சான்றிதழ் கோரி மாநில அரசிடம் விண்ணப்பித்தது. ஆனால், மாநில அரசு அதை வழங்க மறுத்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார் அந்த பெண். அவரது மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும், அந்த பெண்ணுக்கு பட்டியலின சான்றிதழை வழங்க மறுத்தது.

இதை எதிர்த்து அந்த பெண் தரப்பில்,  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து இன்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் ஆர். மகாதேவன் அமர்பு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

மனுதாரர் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்கிறார் என்பதையும், தேவாலயத்திற்கு தவறாமல் செல்வதன் மூலம் மத விசுவாசத்தை தீவிரமாக கடைப்பிடிப்பதையும் முன்வைக்கப்பட்ட சான்றுகள் தெளிவாக நிரூபிக்கின்றன” என்று தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான உண்மையான நம்பிக்கையின்றி மதம் மாறுவது இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரானது மற்றும் அரசியலமைப்பின் மீதான மோசடி என்று கூறிய நீதிபதிகள்,  இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே . சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய  உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், இடஒதுக்கீட்டுக்காக மதமாற்றம் செய்வது அரசியல் சாசன மோசடி: மதம் மாறிய கிறிஸ்தவ பெண்ணின் கோரிக்கையானது,  இடஒதுக்கீட்டுக் கொள்கையின் சமூக நெறிமுறைகளை தோற்கடிக்கும் என்று தீர்ப்பளித்தது.

பிறப்பால் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்து மதத்தைத் தழுவியதாகக் கூறி, பட்டியல் சாதிச் சமூகச் சான்றிதழ் வழங்கக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.