சென்னை: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய  அமைச்சர் பொன்முடி தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

விழுப்புரத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. சமூக வலைதளங்களில் பொன்முடியின் பேச்சை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்ததுடன், அவரது பதவியை பறிக்க வேண்டும், கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். மேலும் அரசியல் கட்சியினரும் பொன்முடிக்கு நாவடக்கம் தேவை என கடுமையாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர் பொன்முடிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில்,   தி.மு.க துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கப்படுவதாக, கட்சி தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மீண்டும் மீண்டும் சர்ச்சை பேச்சு: அமைச்சர் பொன்முடியை கண்டித்து பதிவு போட்ட திமுக எம்.பி. கனிமொழி