கொல்கத்தா
நாளை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜி்த் கங்கோபாத்யாயா ராஜினாமா செய்ய உள்ளார்.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அபிஜித் கங்கோபாத்யாயா நீதிபதியாகப் பதவி வகித்து வருகிறார். இவர அளித்த சில தீர்ப்புகள் கடும் சர்ச்சையை உருவாக்கின.
குறிப்பாக நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா, கல்வி தொடர்பான வழக்குகளில் அளித்த தீர்ப்புகள் அரசியல் அரங்கில் விவாதத்தை உருவாக்கின. அவர் ஆசிரியர் தேர்வு முறைகேடு தொடர்பாக அவர் சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயா நாளை (செவ்வாய்க்கிழமை) ராஜினாமா செய்கிறார். இந்த தகவலைக் கொல்கத்தாவில் தனது வீட்டு முன்பு அவரே நிருபர்களிடம் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரிடம் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பிக்கப் போவதாகவும், அதன் நகல்கள் உச்சநீதிமன்றம்,, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
செய்தியாளர் அவர் ராஜினாமாவுக்கு பிறகு அரசியலில் ஈடுபட போகிறாரா என்று கேட்டதற்குத் தாம்’ராஜினாமா கடிதம் அளித்த பிறகு எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]