சென்னை:

புத்தக்கண்காட்சியில் சர்ச்சைக்குரிய வகையில், அரசு மற்றும் அரசு அதிகாரிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில்,எழுதப்பட்ட புத்தகம் விற்பனை செய்தது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டார்.

இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்பட பத்திரிகையாளர்கள் சங்கமும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

சென்னை நந்தனத்தில் புக்கக்கண்காட்சி நடைபெற்று வருகிறது. இங்கு பத்திரியாளர் அன்பழகன் நடத்தி வரும் மக்கள் செய்தி மையம் தரப்பிலும் புத்தக்கடை போடப்பட்டுள்ளது. இந்த கடையில், அரசு மற்றும் அரசு அதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் தொடர்பான புத்தகம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு  தென்னிந்திய புத்தக விற்பனையாளரும், பதிப்பக புத்தக செயலாளருமான முருகன், இதுபோன்ற புத்தங்கள் இங்கு விற்க அனுமதி இல்லை என்று கூறியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அன்பழகன் காவல்துறையினரால் நேற்று அதிகாலை 5 மணி அளவில் கைது செய்யப்பட்டார்.

அவர்மீது,அத்துமீறி நடந்து கொள்ளுதல் ( 341), – ஆபாசமாக திட்டுதல் 294(பி), கொலை மிரட்டல் (506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பத்திரிகையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற செயல்களை தமிழக அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்ட அன்பழகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்று  வலியுறுத்தி உள்ளனர்.