சென்னை: சர்ச்சைக்குரிய வகையிலான மோட்டிவேஷனல் ஸ்பீச்சு-க்கு ஏற்பாடு செய்திருந்த  அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பணியிடம் மாற்றம் செய்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,   ஆசிரியர் தின விழாவில் கலந்து கொண்ட மகாவிஷ்ணு என்பவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக  முதல்வர் ஸ்டாலின் அறிக்கை விடும் அளவுக்கு சீரியஸாக மாறி இருக்கிறது. “கல்விக்குத் தொடர்பில்லாத எந்த நிகழ்ச்சிகளையும் அரசு அனுமதியின்றி பள்ளிகளில் நடத்தக் கூடாது” என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதைத்தொடர்ந்தே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், உரையாற்றிய மகாவிஷ்மீது நடவடிக்கை எடுப்பதாக கொந்தளித்துள்ளார். மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை  தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம்  செய்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. பள்ளியில் பிற்போக்குத்தனமான சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்த விவகாரத்தில் அரசு முதற்கட்ட நடவடிக்கை இது என கூறப்பட்டுள்ளது.

மேலும் இவ்விவகாரத்தில் விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

என் ஆசிரியர அவமானப்படுத்தியிருக்க.. சும்மா விடமாட்டேன்! அமைச்சர் அன்பில் மகேஸ் கொந்தளிப்பு…