வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

வேலூர் மாவட்டத்தில் நேற்று 149 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 901 ஆக உயர்ந்தது. இவர்களில் 214 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று  மேலும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1123 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரிப்பை தடுக்க, மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை கடுமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் கே.சி.வீரமணி,  இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன் என்றும், மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.