துபாய்: ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோரின் ஐபிஎல் ஒப்பந்தங்களை ரத்துசெய்ய சென்னை அணி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் ஆகியோருடனான ஒப்பந்தம் கடந்த 2018ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. அதன்படி ரெய்னாவுக்கு ரூ.11 கோடியும், ஹர்பஜனுக்கு ரூ.2 கோடியும் வழங்கப்படுகிறது. நடப்பு சீசனுடன் இந்த ஒப்பந்தம் முடிவடைகிறது.
ஆனால், இந்த சீசனில் ரெய்னாவும், ஹர்பஜனும் தனிப்பட்ட காரணங்களுக்காக பங்கேற்காமல் விலகினர். எனவே, அவர்களுக்கான ஒப்பந்தங்களை ரத்துசெய்யும் நடவடிக்கைகளை சென்னை அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், இதுதொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்கவும் சென்னை அணி நிர்வாகம் தரப்பில் மறுத்துவிட்டனர்.
சென்னை அணியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து இருவரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன. விளையாடாதவர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.