வி.கே. சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் , ஆதரவாளர்களின் வீடுகள், மற்றும் அலுவலகங்களில் நான்காவது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே முதல் இரு நாட்கள் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம், தங்கம் உள்ளிட்ட விவரங்கள் குறித்த முதல் கட்ட அறிக்கையை வருமான வரித்துறை அதிகாரிகள் தயார் செய்து, வருமான வரித்துறை தலைமை அலுவலகத்துக்கும்  அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில், தாங்கள் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து நாளை வருமானவரித்துறையினர் அறிவிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

150க்கும் மேற்பட்ட வங்கிகணக்குகள் முடக்கப்பட்டுள்ளன – ரூ 1000 கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான ஆவணங்கள் விவேக், கிருஷ்ணபிரியா தொடர்புடைய இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது. சோதனை முழுமையாக முடிந்த பின்னர் அடுத்த கட்ட அறிக்கை விரிவாக தயார் செய்யப்பட்டு வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.