ஸ்ரீவில்லிபுத்தூர்:

ங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு 2வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.

சதுரகிரி மலையில் பிரபல சிவன் கோவிலான சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பவுர்ணமி மற்றும் அமாவாசை  தினங்களில் பக்தர்கள் திரண்டு செல்வது வழக்கம்.

மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மலை பகுதி வழியாக நடந்து செல்ல வேண்டும. இந்நிலையில், மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்த மழை பெய்துவருவதால், சதுரகிரி மலைக்கு செல்ல 2வது நாளை தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் (17ந்தேதி) அமாவாசை வர இருப்பதால், கோவிலுக்கு செல்ல பக்தர்கள் பலர் தயாராக உள்ள நிலையில்,சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல 2வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.