பிக் பாஸ் சீசன் 4 : உடல்நலம் சரி இல்லாததால் போட்டியாளர் திடீர் வெளியேற்றம்

பிக் பாஸ் நிகழ்வு ஆங்கிலத்தில் தொடங்கி தற்போது பல இந்திய மொழிகளிலும் நடைபெற்றுக் கொண்டு உள்ளது.
இதில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 4 ஆம் சீசன் நடைபெறுகிறது.
இதில் தமிழ் நான்காம் சீசனையும் வழக்கம் போல் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

தெலுங்கு பிக்பாஸ் 4 ஆம் சீசனை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார்.
அவர் நடிக்கும் வைல்ட் கார்ட் என்னும் படத்தின் படப்பிடிப்புக்காக நாகார்ஜுனா சென்றுள்ளதால் அவர் மருமகள் நடிகை சமந்தா நிகழ்வை தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளரான நோயல் சீன் நிகழ்வை விட்டு வெளியேறி உள்ளார்
உடல்நலம் சரியில்லாததால் நோயல் சீன் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி உள்ளார்.
இவர் ராப் பாடகர், நடிகர் தொகுப்பாளர் என பன்முக திறமை உடையவர் ஆவார்.
Patrikai.com official YouTube Channel