தமிழக்ததில், நீட் தேர்வு பயத்தில் 3 மாணாக்கர்கள் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், நடிகர் சூர்யா, “உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக குற்றம் சாட்டியிருந்தார்.
நடிகர் சூர்யா நீதிபதிகளை குறைகூறியிருக்கிறார், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீதிமன்றம் குறித்து விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் கருத்து உள்நோக்கம் இல்லாதது, அவர்மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதிகள் இணைந்து தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.
ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாஷா, டி.சுதந்திரம், கே.கண்ணன், டி.ஹரிபரந்தாமன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் இணைந்து சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி, ஏ.பி.ஹிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில், சூரியாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு தொடரக்கூடாது, நீட் தேர்வினால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்தே அவர் தெரிவித்துள்ளார், அவர்மீது நடவடிக்கை எடுக்காமல் பெருந்தன்மையுடன் விட்டு விடலாம் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.