சென்னை:
தமிழகத்தில் கட்டிட பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு, தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு. உள்ளது. இந்த திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் எடப்பாடி, கட்டட தொழிலாளர்களுக்கு அம்மா உணவகங்களில் விரைவில் இலவசமாக உணவு (விலையில்லா உணவு) வழங்க நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு வழங்கப்படும் இலவச உணவுக்கான பணம், கட்டிட நல வாரியம் மூலம் அரசுக்கு செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே கட்டுமான தொழில் பல வட இந்திய நகரங்களைவிட சென்னையில் அதிகரித்து இருப்பதாகவும், சென்னை மிகவும் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அனராக் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில், கட்டிட தொழிலாளர்களுக்கு இலவச உணவு வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், தமிழகஅரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் கள் வாரியம் ( Tamil Nadu Construction Workers Welfare Board) இதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார். அதன்படி, அம்மா உணவகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப் படும் என்றும், அதற்கான தொகை, அம்மா உணவக கணக்காளர்களால் குறித்துவைக்கப்பட்டு மொத்தமாக மாதம் ஒருமுறை அரசுக்கு செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் சென்னை மாநகராட்சிக்கும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் வாரியம் இடையே போடப்பட்டுள்ளது.