அயோத்தி:
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ 1,100 கோடி செலவாகும் எனவும் 3½ ஆண்டுகளுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும் என்றும் கோவிலை கட்டும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டுவதற்கு ரூ 1,100 கோடி செலவாகும் எனவும் 3½ ஆண்டுகளுக்குள் கோவில் கட்டி முடிக்கப்படும் என்றும் கோவிலை கட்டும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அறக்கட்டளையின் பொருளாளர் கோவிந்த் தேவ் கிரிஜி மஹராஜ் கூறியதாவது:-
ராமர் கோவிலை கட்டுவதற்கு மட்டும் ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் கோவில் உட்பட ஒட்டுமொத்த வளாகத்தையும் அமைப்பதற்கான செலவு ரூ.1,100 கோடிக்கு குறையாமல் இருக்கும்.
மும்பை, டெல்லி சென்னை, கவுகாத்தி ஆகிய ஐ.ஐ.டி.களின் வல்லுனர்கள் ‘எல் அண்ட் டி’ மற்றும் ‘டாடா’ குழுமத்தின் சிறப்பு பொறியாளர்கள் இந்த வளாகத்தின் வலுவான அடித்தள திட்டத்தை வகுக்க ஆலோசித்து வருகின்றனர். கோவில் அஸ்திவாரம் அமைப்பது குறித்து நாளை (அதாவது இன்று) நடைபெறும் அறக்கட்டளையின் கூட்டத்தில் விவாதித்து இறுதி செய்யப்படும். மத்திய அரசு அமைத்துள்ள இந்த அறக்கட்டளைக்கு இதுவரை இணையம் வழியாக ரூ.100 கோடிக்கு மேல் நன்கொடைகள் கிடைத்துள்ளன.
இருப்பினும் நாங்கள் 4 லட்சம் கிராமங்களையும், 11 கோடி குடும்பங்களையும் சென்றடைவோம். இதனால் சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இந்த முயற்சியில் பங்கேற்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.