தராபாத்

ந்திராவின் தலைநகர் அமராவதியின் கட்டுமான திட்ட அறிக்கை முடிவுக்கு வந்து, வரும் விஜயதசமியில் இருந்து கட்டுமானப் பணி துவங்கும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேச மாநில தலைநகர் அமராவதி கட்டுமானப் பணிகள் பற்றி சந்திரபாபு நாயுடு கூறியதாவது :

”அமராவதி நகரின் வடிவமைப்பு இறுதி நிலையை அடந்துள்ளது.   சட்டசபை கட்டிடம் டிசைன் ஆகஸ்ட் 15க்குள் முடிவு செய்யப்படும்.   நகரின் முதல் பணியாக சட்டசபை கட்டும் பணி வரும் விஜயதசமி அன்று ஆரம்பிக்கப்படும்.   நகரில் என்.டி. ராமாராவ், அம்பேத்கார் ஆகியோரின் சிலைகள் அமைக்கப்படும்.  நகரின் மையைப்பகுதியில் 500 மீட்டர் உயரமுள்ள ஒரு கோபுரம் அமைக்கப்படும்.  கோபுரத்தின் மேலிருந்து பார்க்கும் போது முழு நகரையும் பார்க்க முடியும்.   சட்டசபைக் கட்டிடம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் குடியிருப்புக்கள் 900 ஏக்கரில் அமைக்கப்படும்.  உயர்நீதி மன்றம், நீதியரசர்களின் குடியிருப்புக்கள் 300 ஏக்கரில் அமைக்கப்படும்.  அத்துடன் அமராவதியை ஆந்திராவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்து சேரும்படி சாலை வசதிகள் செய்துத் தரப்படும்” என தெரிவித்தார்.

இதற்கான செலவுத் தொகை எவ்வளவு என இன்னும் அறிவிக்கப்படவில்லை.  அரசு தரப்பில் இருந்து எவ்வளவு தொகை ஆகும் என்பதை அந்த கட்டிடம் கட்டும் நிறுவனங்கள் கொட்டேஷன் கொடுத்து இறுதி முடிவு எடுத்த பின்பே தெரிவிக்கும் என கூறப்படுகிறது.

சாலை வசதிகள் அரசுடன் சேர்ந்து ஜப்பான் இண்டர்நேஷனல் கார்ப்பொரேஷன் என்னும் நிறுவனம் வடிவமக்கும் என சொல்லப்படுகிறது.   சாலைகள் சுற்றுச்சூழல் மாசடையாமல் இருக்கும் படி வடிவமைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.