டெல்லி:

யோத்தி சர்ச்சைக்குரிய  நிலத்திற்கு  உரிமை கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மத்தியஸ்தர்களை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஓய்வுபெற்ற முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி  விவகாரம் தொடர்பான வழக்கில் அலகா பாத் உயர் நீதிமன்றம், உரிமை கொண்டாடி வழக்கு தொடர்ந்து 3 அமைப்பினரும் பிரித்து எடுத்துக்கொள்ளும்படி தீர்ப்பு வழங்கியது. அந்த  தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனியார் சார்பில் 14 மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் மீதான   உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் விசாரித்து வருகிறது. கடந்த 26-ம் தேதி நடைபெற்ற விசாரணை யின்போது,  அயோத்தி நில உரிமை தொடர்பாக மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண விரும்புவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.  முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி எம்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்,  மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை நியமித்து உள்ளது.

இந்த குழுவினர் ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தையை தொடங்கி  8 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும், விசாரணை உத்தரபிரதேச மாநிலம் பைசாபாத் நகரில் நடைபெறும் என்றும், அதற்காக தேவையான உதவிகளை உ.பி. மாநில அரசு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.