சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த 2வது கட்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டியது உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக, அதிமுக உள்பட சில கட்சிகள்  தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றன.

இந்த நிலையில், தே.மு.தி.க. சார்பில் 234 தொகுதிகளுக்கு  தேர்தல் பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு  வருகிறார். ஏற்கனவே முதற்கட்டமாக 225 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை கடந்த 28-ந்தேதி நியமித்த விஜயகாந்த் தற்போது  மீதமுள்ள 9 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை நியமித்து உத்தரவிட்டுஉள்ளார்.

இதுகுறித்து, விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஸ்ரீபெரும்புதூர் (தனி) -பி.வி.திருமால்,

தாம்பரம்-ஆர்.ஆனந்தராஜ்,

திருப்போரூர்- கே.ரகுராமன்,

பல்லாவரம்- கே.மகாதேவன்,

செங்கல்பட்டு- கே.என்.ஜெயபால்,

செய்யூர் (தனி) -சிவா,

காஞ்சீபுரம்- எஸ்.லட்சுமணன்,

மதுராந்தகம் (தனி) – ஏ.விஜயகுமார்,

உத்தரமேரூ ர்- கே.பி.அருண்குமார்.

ஆகியோர் தொகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.