நாகர்கோவில்:
கலியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், அவர்கள் மேலும் 10 காவல்துறையினரை கொல்ல சதி திட்டம் தெரிய வந்துள்ளது என்று விசாரணை அதிகாரி ஸ்ரீநாத் கூறி உள்ளார்.
இந்த தகவல் காவல்துறையினர் மட்டுமின்றி மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம், கன்னியக்குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கடந்த 8ந்தேதி இரவு பணியின்போது எஸ்.ஐ வில்சனை பயங்கரவாதிகள் இருவர் கத்தியாவில் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்துவிட்டு தப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக அண்டை மாநிலங்களாக கேரளா மற்றும் கர்நாடகாவிலும் அதிரடி நடவடிக்கை எடுத்தப்பட்டது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக இதுரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொலை செய்த கொலையாளிகள் சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் விசாரணை அதிகாரி ஸ்ரீநாத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார். விசாரணைக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ஸ்ரீநாத், கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவரிடமும் செய்யப்பட்ட விசாரணையில் 20 போலீசாரை கொலை செய்ய அவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளளது.
மேலும, தங்களுடைய கூட்டாளிகளை கைது செய்ததால் காவல்துறையை பழிவாங்க திட்டம் போட்டதாகவும் முதல்கட்டமாக வில்சனை கொலை செய்துவிட்டு அதன் பின்னர் தொடர்ச்சியாக 20 போலீசார்களை கொலை செய்ய திட்டமிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கைதான தீவிரவாதி சமீம் என்பவர் மீது ஏற்கனவே 14 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறினார்.
ஏற்கனவே நடத்தப்பட்ட குடியரசு தினத்தன்று டெல்லி, குஜராத்தில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தெரிவித்துள்ள வர்கள், இதற்காக 17 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், இவர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பரபரப்பு தகவல்களை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.