சென்னை: விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த கொரோனா தடுப்பு மருந்து, அங்கிருந்து, டிஎம்ஸ் வளாகத்தில் உள்ள ஸ்டோரேஜ் நிலையத்துக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் வரும் 16ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு முதல்கட்டமாக புனேவில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட 5,36,000 டோஸ் தடுப்பு மருந்துகள் இன்று காலை 11 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. அதையடுத்து, அந்த மருந்துகள் அனைத்தும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், குளிரூட்டப்பட்ட வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டு, சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள ஸ்டோரேஜ் கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த தடுப்பு மருந்துகள் பின்னர், பலத்த பாதுகாப்புடன் மற்ற மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்து உள்ளர்.