டில்லி:
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை விரைவில் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துமாறு ஜனாதிபதிக்கு காங்கிரஸ் கட்சியினர் கடிதம் எழுதியுள்ளனர்.
குஜராத் தேர்தலுக்காக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடரை விரைவில் கூட்டுமாறு காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சர்மா மற்றும் தீபேந்தர் ஹூடா ஆகியோர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், ‘‘குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தெடரை தாமதப்படுத்தி வருகிறது. இச்செயலானது தவறான முன்னுதாரணம். மத்திய அரசின் கொள்கைகளால் எதிர் விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இதுகுறித்து குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும் என்பதால் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. எனவே குளிர்கால கூட்டத்தொடரை விரைவில் கூட்ட உத்தரவிட வேண்டும்’’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.