டெல்லி
இன்று நாடாளுமன்ற மாநிலக்களவையில் காங்கிரஸ் எம் பி புலோ தேவ் நேதம் மயங்கி விழுந்துள்ளார்.
தற்போது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களவையில் இன்று ஜனாதிபதியின் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட இருந்தது.
ஆனால் அதற்கு முன்பாக நீட் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தி ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. புலோ தேவி நேதம்,அப்போது மயங்கி விழுந்து விட்டார். அவைத் தலைவர் ஜகதீப் தன்கர், உடனடியாக அவருக்கு உதவி செய்யும்படி அருகில் இருந்த எம்.பி.க்களிடம் கேட்டுக் கொண்டார்.
அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் எம்.பி. புலோ தேவிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு புலோ தேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.