பெங்களூரு

ர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவது நிச்சயம் என ராகுல் காந்தி கூறி உள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் காங்கிரஸ்,  பாஜக மற்றும் ம ஜ த கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவுகிறது.   இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைவதால் அனைத்துக் கட்சியினரும் கடும் பிரசாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

பெங்களூருவில் இன்று ராஜிவ் காந்தி, “இந்த தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெல்லும்.  மோடி என்னைப் பற்றித்தான் பேசுகிறார். கர்நாடகாவைப் பற்றி பேசுவதில்லை.   அத்துடன் தலித்துகளுக்கு எதிரான எல்லாப் பிரச்னைகளிலும் மௌனமாக இருக்கிறார்.  அத்துடன் கர்நாடக மக்களின் அடிப்படை பிரச்னைகள அவர் புறக்கணிக்கிறார்.

மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியில் பெண்கள் மீதான தாக்குதலும் பலாத்காரமும் மிகவும் அதிகரித்துள்ளது. அந்த நிலை கர்நாடகாவுக்கு வேண்டாம்.   கர்நாடக காங்கிரஸ் அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்துள்ளது.  ஆனால் விவசாயிகள் கடன் நிவாரணத்துக்காக மத்திய பாஜக அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட அளிக்கவில்லை” என பேசி உள்ளார்.