மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டி: இடது சாரிகளுடன் உடன்பாடு ஏற்படாததால் திடீர் முடிவு

கொல்கத்தா:

மேற்குவங்கத்தில் 42 மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிடும் என அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் சோமன் மித்ரா தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட ஏனைய இடதுசாரி கட்சிகள் சனிக்கிழமை அன்று வேட்பாளர் பட்டியலை அறிவித்தன.

இதனையடுத்து, காங்கிரஸ் கட்சி மேற்குவங்கத்தில் 42 மக்களவை தொகுதிகளிலும் தனியாக களம் இறங்க முடிவு செய்துள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், 42 வேட்பாளர்கள் பட்டியலை ஒப்புதல் பெறுவதற்காக டெல்லிக்கு செல்வதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: The Congress and the Left alliance talks fell, காங்கிரஸ் தனித்து போட்டி, மேற்கு வங்கம்
-=-