சென்னை

ரும் நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை நகரில் ஒரு தொகுதியைக் கேட்க உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில், மகாத்மா காந்தியின் 77-வது நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தையொட்டி, மகாத்மா காந்தி மற்றும் தியாகிகளின் உருவப்படத்திற்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம்,,

”பாஜகவினர் ராமர் கோவிலைக் கட்டிவிட்டதால் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் கோவில் கட்டியவர்கள் யாரும் வெற்றிபெற்றதாக வரலாறு கிடையாது. நீங்கள் கோவில் வேலை முடியாமலேயே கும்பாபிஷேகம் செய்துள்ளீர்கள் என்பதால் 4 சங்கராச்சாரியார்கள் உங்களை எதிர்க்கிறார்கள்.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி, வந்த நாள் முதல் இதுவரை தான் சொன்னது எதையும் தப்பு என்று ஒப்புக்கொண்டது கிடையாது. தற்போது தான் காந்தியின் விவகாரத்தில் முதல் முறையாக தப்பு என்பதை ஒப்புக்கொண்டதே காந்தியின் சக்தி மற்றும் காந்தியின் பெருமை ஆகும்.

பாஜக கூட்டணியில் இருந்து ஏன் விலகினோம் என்பதற்கான காரணத்தை அ.தி.மு.க. இதுவரை மக்களிடம் தெரிவிக்கவில்லை. ஆகவே, இன்னும் பாஜக – அ.தி.மு.க. இடையே கள்ள உறவு இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம்.

ஒரு தொகுதியில் ஒரு கட்சி தொடர்ந்து நின்றால், அந்த தொகுதியில் இன்னொரு கூட்டணிக்  கட்சிக்கு வாய்ப்பு கிடைக்காது. அங்குள்ள அந்த கட்சி தொண்டர்கள் நாங்கள் என்ன இவர்களுக்கு வேலை செய்து கொண்டே இருப்பதுதான் நமது வேலையா? என்று கேட்பார்கள். தமிழகத்தில் எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும்.

பல காங்கிரசார் சென்னையில் ஒரு தொகுதி வாங்கி கொடுத்தால் என்ன? நாம் என்ன தி.மு.க.வுக்கு தான் சென்னை நகர தொகுதிகளைக் கொடுக்க வேண்டுமா? என என்னிடம் கேட்டார்கள். நான் உங்களுக்காக கேட்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன்.”

என்று கூறினார்.