சென்னை:
3வது பெரிய கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் –
3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் கட்சி. 73 மாநகராட்சி, 151 நகராட்சி, 368 பேரூராட்சி வார்டுகளில் வெற்றி.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். வாக்களித்த மக்களுக்கு எங்களது நன்றிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.