பனாஜி:

ர்நாடக மாநிலத்தில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து கோவாவிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்.எல். ஏக்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில், 16 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 14 தொகுதிகளில் பா.ஜ.கவும் வெற்றி பெற்ற நிலையில், கூட்டணி கட்சிஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.  முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து,  பிரமோத் சாவந்த், கோவாவின் புதிய முதல்வராக உள்ளார்.

தற்போதைய நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு  15 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில்  10 பேர், பாபு கவேல்கர் தலைமையில், அங்கிருந்து விலகி  ஆளும் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கோவா சட்டப்பேரவை துணை சபாநாயகர் மைக்கேல் லோபோ தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.