புதுடெல்லி:
த்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக ஆதரவை திரட்டுவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் கட்சி, விவசாய மசோதாவிற்கு எதிரான பத்திரத்தை வெளியிட்டு அதில் விவசாயிகளின் கையெழுத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

நாங்கள் மாநிலத்தில் உள்ள 60 லட்சம் விவசாயிகளை சந்தித்து இந்த விவசாய மசோதாவைப் பற்றி அவர்களின் கருத்தை கேட்டறிந்துள்ளோம், இந்த சட்டம் விவசாயிகளுக்கு விரோதமானது என்றும் காங்கிரஸ் தலைவரும் மாநில வருவாய் துறை அமைச்சருமான பாலாசாஹெப் தோரட் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூர் காங்கிரஸ் பிரிவினரால், விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட கையொப்பங்ளுடன் கூடிய பத்திரத்தை, பல அட்டை பெட்டிகளில் நிரப்பி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா பொறுப்பாளரான எச்கே பாட்டிலிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைப்பற்றி எச்கே பாட்டில் தெரிவித்துள்ளதாவது: கட்சியின் திட்டப்படி நாடு முழுவதும் உள்ள 2 கோடி விவசாயிகளிடமிருந்து கையெழுத்துக்களை கட்சி சேகரித்து வருகிறது, கையெழுத்துக்களுடன் கூடிய இந்த பத்திரங்கள் நவம்பர் 19 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப்படைக்கப்படும், இந்த பாத்திரங்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜனாதிபதியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எச்கே பாட்டில் தெரிவித்துள்ளார்.