புதுடெல்லி: 
ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
ஜேஇஇ தேர்வுத் தாள் கசிவு விவகாரத்தில்  சிபிஐ ஏழு பேரைக் கைது செய்த பிறகு, ஜேஇஇ மெயின் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது குறித்து, உச்ச நீதிமன்றம் கண்காணிப்பில்  விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,   கடுமையாக உழைக்கும் மாணவர்களுக்கு நியாயமாக ஜேஇஇ தேர்வு நடத்துவதற்கு நாடே கடன்பட்டிருக்கிறது, ஆனால் மத்திய அரசு இதைச் செய்யாமல் இருந்து வருகிறது. JEE (மெயின்) தேர்வில் விதிமுறைகளை மீறப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்
காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவான NSUI, இந்தப் பிரச்சினையில் நாடு முழுவதும் திங்கள்கிழமை போராட்டங்களை அறிவித்துள்ளது.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், டெல்லி காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா மற்றும் என்எஸ்யுஐ தேசியத் தலைவர் நீரஜ் குந்தன் ஆகியோர் என்டிஏ நடத்திய மற்ற தேர்வுகளில் இதுபோன்ற மோசடிகள் நடக்கவில்லை என்று மாணவர்களுக்கு எப்படி உறுதியளிக்க முடியும் என்றும்,  நாட்டின் மிகவும் மதிப்புமிக்க நுழைவுத் தேர்வுகளில் ஒன்று (JEE) இந்த மோசடிகளிலிருந்து தப்பவில்லை என்றால், எதிர்கால தொழில் வல்லுநர்களின் தரம் என்ன என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“இது நாட்டின் எதிர்காலம் தொடர்பான பிரச்சனை என்பதால், உச்ச நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையின் கீழ் முழு மோசடியையும் விசாரிக்க நாங்கள் கோருகிறோம்” என்று வல்லப் செய்தியாளர்களிடம் கூறினார்.
“JEE முதன்மைத் தேர்வுகள் 2021க்கு தேர்வு பெற்ற்பா  22 லட்சம் விண்ணப்பதாரர்களில் ஒவ்வொரு மாணவரும் தங்கள் எதிர்காலம் ஆபத்தில் இருப்பதால் நியாயமான வாய்ப்பைப் அவர்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கம் உள்ளது என்று அவர் கூறினார்.