டில்லி

நாடாளுமன்ற வளாகத்தில் ராஜராஜ சோழனுக்கு சிலை வைத்து அவர் பெயரை மும்பை துறைமுகத்துக்கு சூட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிர்சாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் தற்போது நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட கூட்டத்தொடர் நடந்து வருகிறது.   இதில் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் விஷ்ணுபிர்சாத் நேற்று மக்களவையில் உரையாற்றி உள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த விஷ்ணுபிர்சாத் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஆவார். இவர் தமிழகத்தில் உள்ள ஆரணி தொகுதியில் கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்

விஷ்னுபிரசாத் தனது உரையில், “தமிழக மன்னன் ராஜராஜ சோழனுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைத்து அவரை கவுரவிக்க வேண்டும்  மேலும் மும்பை துறைமுகத்துக்கு மாமன்னர் ராஜராஜ சோழன்   பெயரை வைக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.