கிம்பூர் கேரி

த்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் அவர்கள் மீது கார் மோதிச் செல்லும் வீடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தின் திகுனியா அருகே உள்ள பன்வீர்பூரில், மாநில துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவருடன் இந்த கிராமத்தைச் சேர்ந்த மத்திய உள்துறை இணை அமைச்சரான அஜஸ் மிஸ்ரா வும் கலந்து கொண்டார்.

பாஜக அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இந்த நிகழ்ச்சிக்கு வர இருந்த துணை முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக கறுப்புக்கொடிகளுடன் திகுனியாவில் சாலையின் இருபுறமும் திரண்டு கோஷமிட்டவாறே இருந்தனர்.

அந்த வழியாக வந்த பாஜக தொண்டர்களின் கார் அணிவகுப்பு ஒன்று அந்த வழியாக வந்தது. அதில் ஒரு கார் விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  ஆத்திரமடைந்த விவசாயிகள், அங்கு பெரும் வன்முறையில் ஈடுபட்டு பாஜக வினர் வந்த 2 கார்களை தீ வைத்து எரித்தனர்.

மேலும் அதில் வந்தவர்களையும் பலமாக தாக்கினர். இந்த வன்முறையில் மேலும் 2 விவசாயிகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தனது பயணத்தை ரத்து செய்தார்.

விவசாயிகள் மீது வேண்டுமென்றே மோதிய காரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். அவர் விவசாயிகள் மீது துப்பாக்கியால் சுட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அந்த காரில் தனது மகன் இல்லை என மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதியதின் வீடியோ வெளியாகியுள்ளது. காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், நெஞ்சை பதை பதைக்கும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.  வீடியோவில் சாலையில் நிற்கும் விவசாயிகள் பின்புறம் வழியாக வேகமாக வரும் கார் அவர்கள் மீது ஏற்றிவிட்டு நிறுத்தாமல் செல்கிறது. தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன.

டிவிட்டரில் பலரும் இந்த வீடியோவை டிவிட்டரில் பலரும் பகிர்ந்து வைரலாகி வருகிறது.  .இந்த வீடியோ பார்ப்பவர்களைப் பதற செய்யும் வகையில் உள்ளது.

நமது வாசகர்களுக்காக அந்த வீடியோ இதோ: