பனாஜி
நடைபெற உள்ள கோவா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 8 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வரும் ஆண்டு கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த முதல் வேட்பாளர் பட்டியலில் 8 பேர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன.
அவை பின் வருமாறு
- மாபுசா தொகுதி – சுதிர் கனோல்கர்
- தலிய்கோவா தொகுதி – டோனி ராட்ரிகூஸ்
- போண்டா தொகுதி – ராஜேஷ் வெர்ன்கர்
- மர்முகோவா தொகுதி – சங்கல்ப் அமோன்கர்
- குற்றோரிம் தொகுதி – அலெக்சோ ரெஜினால்டோ லாரென்கோ
- மார்கோவா தொகுதி – திகம்பர் வசந்த் காமத்
- குன்கோலிம் தொகுதி – யூரி அலெமாவ்
- கியூபெம் தொகுதி – அல்டோன் டி கோஸ்டா