சண்டிகர்: அரியானா காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அரியானா மாநிலத்திலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2777 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 76,549 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 806 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60,051 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில், 15,692 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 12,94,598 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட மாநிலங்களவை எம.பி. காங்கிரஸ் எம்.பி தீபேந்திர சிங் ஹூடாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுஉள்ளது.
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும், மருத்துவர்களின் அறிவுரைகளின்படி தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், அனைவரது ஆசிர்வாதத்தாலும் சீக்கிரம் குணமடைந்து திரும்புவேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று தெரிவித்து உள்ளார்.