விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம் எஃகு ஆலை தொழிலாளர் பணி நீக்கத்தை எதிருத்து காங்கிரஸ் போராடி வருகிறது

அண்மையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இயங்கிவரும் விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் வேலை பார்த்து வந்த 2 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இது நாடெங்கும் கடும் அதிர்ச்சி அலைடௌ எழுப்பியது,
அவர்களை மீண்டும் பணியில் சேர்க்கவலியுறுத்தி ஆந்திரா காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா அடையாள உண்ணாவிரத போராட்டம் அறிவித்தார். இதைடிட்டு நேற்று முன்தினம் மதியம் 1.30 மணிக்கு அவர் போராட்ட களத்திற்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி இரவு 9 மணி வரை போராட்டம் நடத்தினார்.
அங்கு வந்த போலீசார் சர்மிளாவை கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்ற பின்னர் அவர் விடுவிக்கப்பட்டு, அங்கிருந்து ஐதராபாத்துக்கு திரும்பிச் சென்றார். காங்கிரஸ் தொண்டர்கள், சர்மிளாவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்தனர். சர்மிளா “வேண்டுமென்ற இழப்பு ஏற்படுவதாக காட்டி, எஃகு ஆலையை தனியார் மயமாக்க பா.ஜனதாவினர் தந்திரமாக முயற்சிக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டி உள்ளார்.