புதுடெல்லி:
காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று இரவு வேலையின்மை மற்றும் பிற பிரச்சினைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அணிவகுத்துச் செல்ல முயன்றபோது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சிலரை கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், இந்தியாவில் ஏழைகளுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால் காவல்துறையினர் அவர்களை கலைக்க முயன்றபோது, காவலாளிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது அதில் போலீசார் சில போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில் நம்நாட்டில் 144 தடை சட்டம் நீடித்து வருவதால், போலீசார் அனைத்து போராட்டக்காரர்களும் கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர் என்று காவல் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் போராட்டக்காரர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காததால் போலீசார் ஆத்திரமடைந்ததனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.