நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
போராடிப் பெற்ற சுதந்திரத்தின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக பல்வேறு தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தேச விடுதலைக்காக போராடிய நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடிய ராகுல் காந்தி, அங்கிருந்த குழந்தைகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தனது தாயார் சோனியா காந்தியை அழைத்து வந்து குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தார்.
Very sweetly loving way of connecting with the future of India. #SoniaGandhi #RahulGandhi@RahulGandhi @priyankagandhi @manoramanews #IndependenceDayIndia2021 pic.twitter.com/4dlNoLH08q
— Ningombam Bupenda Meitei (@BupendaMeitei) August 15, 2021
குழந்தைகளுக்கு சுதந்திர தின வாழ்த்து கூறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தன்னுடன் பேச விரும்பியதற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர், நாளைய இளைய சமுதாயம் நாட்டு நலனுக்காக செய்யவேண்டியது குறித்து விளக்கினார்.
இந்தக் காட்சி சமூக வலைதளத்தில் பதிவிடப் பட்டதைத் தொடர்ந்து அது தற்போது வைரலாகி வருகிறது.