டில்லி:
தன்னை வெற்றிபெறச் செய்த வயநாடு தொகுதி மக்களுக்கு நன்றி கூற கேரளா வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் உள்பட மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுலை வரவேற்றனர்.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு 4லட்சத்து 31 ஆயிரத்து 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து, தன்னை தேர்ந்தெடுக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்றுமுதல் 3 நாள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்களோடு தங்கி, அவர்களை சந்தித்து பேசி நன்றி தெரிவிக்கிறார்.
இதற்கான இன்று கேரள வந்த ராகுலை காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்பட மூத்த நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து வயநாடு வாகனம்மூலம் வயநாடு சென்ற ராகுலுக்கு சாலை இருமங்கிலும் காங்கிரஸ் தொண்டர்களும் , பொதுமக்களும் திரளாக கூடி நின்று வரவேற்பு கொடுத்தனர்.
வயநாட்டின் கல்பேட்டா, கம்பல்காட்டு, மனந்தவாடி, பதேரி பகுதியில் இன்று நன்றி தெரிவிக்கும் ராகுல் காந்தி, மக்களோடு மக்களாக இணைந்து, அவர்களுடன் கலந்துரையாடி தனது நன்றியை தெரிவிக்கிறார். மாநில காங்கிரஸ் தொண்டர்களுடன் சந்திப்பு உள்பட மொத்தம் 15 நிகழ்ச்சிகளில் ராகுல் கலந்துகொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.