சென்னை: எரிபொருட்கள் விலை உயர்வை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

நாடு முழுவதும் மார்ச் 22 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.தொடர்ந்து இன்றும் 10வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது. புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல் விலை.. டீசல் விலையும் உயர்வு இன்று 76 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  மத்திய பாஜக. அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி வருவதைக் கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மார்ச் 31 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பை வெளிப்படுத்த தங்கள் வீடுகளின் முன்பும், பொது இடங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், பெட்ரோல் கேன் போன்றவற்றிற்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்தும் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று முற்பகல் 11மணி அளவில் போராட்டம் நடைபெறுகிறது.