சென்னை: தமிழ்நாட்டை பொறுத்தவரை யாராக இருந்தாலும் கூட்டணி வைத்தால்தான் வெற்றி பெற முடியும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவில் கலந்து கொண்ட செல்வப்பெருந்தகை, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,  தமிழ்நாட்டில் கூட்டணி வைத்தால்தான்  காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியும் என கூறிய மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் என்ன செய்தாலும் பாஜகவால் காலூன்ற முடியாது என்றும் விமர்சித்தார்.

“நாடாளுமன்றத்தில் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டது  குறித்து விமர்சனம் செய்தவர், அங்க ஜனநாயகம் இல்லை; ஜனநாயகத்தின் அடிப்படையில் நாடாளுமன்றம் நடக்கவில்லை. ஜனநாயகம் என ஒன்று இருந்திருந்தால், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதித்து இருப்பார்கள் என்றார்.

பட்ஜெட் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர்,  பொதுவாக, ஒரு மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது என்றால், அதற்கு முந்தைய பட்ஜெட்டில் அந்த மாநிலத்திற்கு தேவையான அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்காக எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஏனெனில், எந்த காலத்திலும் பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி பெறாது என அவர்களே முடிவு செய்துவிட்டனர் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என தெரிந்துவிட்டதால், தமிழ்நாட்டை பட்ஜெட்டில் முழுமையாக நிராகரித்து விட்டார்கள்” என அவர் கூறினார்.

பின்னர், தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் தாக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “எந்த தொலைக்காட்சியை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டாலும் நாங்கள் கண்டிப்போம். இந்தியாவின் நான்காவது தூணாக ஊடகத்தை தாக்க முயற்சிக்கக் கூடாது. ஒருபோதும் பத்திரிகை யாளர்களை தாக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. அவர்களுக்கு முழு பாதுகாப்பை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் வழங்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

பின்னர், கூட்டணி வைத்திருப்பதால்தான் காங்கிரஸ் வலுவிழந்துள்ளதாக பிரவீன் சக்ரவர்த்தி பேசியது தொடர்பாக நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “இங்கே இருப்பவரை பற்றி கேட்டால் பேசலாம். நாங்கள் எல்லாம் காங்கிரஸில் ஒரு சிப்பாய்கள். எங்களை பற்றி கேளுங்கள். காங்கிரஸ் இங்கே வலிமையாக இருக்கிறது.

பாஜகவுக்கு இங்கு எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? தமிழ்நாட்டு மக்கள் அவர்களை அங்கீகரிக்க கூட இல்லை என்றவர், காங்கிரஸ் கட்சி மட்டும் அல்ல எந்தவொரு கட்சியாகஇருந்தாலும் கூட்டணி வைத்தால்தான் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியும்” என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

[youtube-feed feed=1]