டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரும் 14ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம், அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. காணொலி மூலமாக நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல், கே.சி.வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் எழுப்ப வேண்டிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா, சீனா எல்லை பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், வேலையின்மை, கொரோனா தொற்று உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.