டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மூத்த தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும் ராஜீவ் காந்தியின் மகளுமான பிரியங்கா காந்தி, மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், கே.சி. வேணுகோபால்,மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிகாரில் வாக்குரிமைப் பேரணி நடத்தி வரும் நிலையில், இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Photo and Video courtesy: Thanks ANI
[youtube-feed feed=1]