மும்பை: மகாராஷ்டிராவில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு நேற்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்கு இசைத்துக்கொண்டிருந்த இசை கலைஞர்களுடன் இணைந்து, ராகுல் காந்தி டிரம்ஸ் வாசித்தார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி கலம்நூரியில் என்ற பகுதியில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் இசை கலைஞர்களுடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைக்கண்ட பொருமக்கள் ராகுல்காந்தி வாழ்க என கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், மேடையில் ஏறிய ராகுல்காந்தியிடம் இசைக்கலைஞர் ஒருவர் டிரம்ஸ் வாசிக்கும் கருவியை கொடுத்து வாசிக்கச் செய்தார். மேலும் அருகே இருந்த வர் எப்படி வாசிக்க வேண்டும் என ராகுலுக்கு தெரிவித்து அதன்படி வாசிக்கச் செய்தார். கலைஞரின் தாளத்திற்கு ஏற்ப வாசிப்பது என்பதை கற்றுப்கொடுப்பதும் இடம்பெற்றிருந்தது. இந்த பதிவிற்கு பலரும் ராகுல் காந்தியை மக்கள் தலைவர் என பெரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை எனும் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரையில் 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடைய உள்ளது. இந்த யாத்திரையின்போது, ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து வருவதுடன், அங்காங்கே நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் கலந்துகொண்டு வருகிறார்.
பாரத் ஜோடோ யாத்திரை, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரம், தெலுங்கானா வழியாக தற்போது மகாராஷ்டிராவில் பயணித்துக் கொண்டிருக்கிறது. . 60 நாட்களைக் கடந்துள்ள இந்த பயணம் தற்போது மகாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது. 14 நாட்கள் இந்த மாநிலத்தில் நடைபெறும் யாத்திரையாது. 15 சட்டமன்ற மற்றும் 6 நாடாளுமன்ற தொகுதிகள் வழியாக பயணிக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் 382 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் காங்கிரஸின் ஒற்றுமை யாத்திரை வரும் 20 ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நுழைகிறது.
அந்த மாநிலத்தில் கந்த்வா, இந்தூர், உஜ்ஜைன் மற்றும் அகர்-மால்வா வழியாகச் சுமார் 13 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டிசம்பர் 3-ஆம் தேதி ராஜஸ்தானுக்குள் நுழைகிறது.
video: Thanks ANI