திருச்சி: காவல்துறை அதிகாரிக்கே இதுதான் கதி என்றால் சாதரணமக்கள் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது என ஆடு திருடும் கும்பலால் காவல்துறை அதிகாரி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி அச்சம் தெரிவித்து உள்ளார்.

நள்ளிரவில் நகர்வலம் வந்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்ற சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் என்பவர் ஆடு திருடும் கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். இது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த படுகொலை தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எம்.பி  டிவிட் பதிவிட்டுள்ளார், அதில், , ‘ஆடு திருடியவர்களை பிடிக்க,விரட்டிச் சென்ற திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு காவல்துறை அதிகாரிக்கே இதுதான் கதி என்றால் சாதரணமக்கள் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

தமிழக அரசு விரைந்து செயல்பட்டு உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கடமை தவறாத காவல் அதிகாரி பூமிநாதன் அவர்களுக்கு எனது வீரவணக்கம். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த ஜோதி மணி எம்.பி, திமுக அரசுக்கு எதிராக, சாதரணமக்கள் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது விமர்சனம் செய்துள்ள பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆடு திருடும் கும்பலை விரட்டிச்சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை! முதலமைச்சர் ரூ.1 கோடி நிதிஉதவி…