சென்னை,
நாளை காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூடுகிறது. இந்த கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளை மாலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை மாலை 5 மணிக்கு, காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறயுள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பங்கேற்க பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை கூடும் சட்டமன்ற கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும் என்றும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதமும், அதற்கான நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா அணியில் சேர பணம் பெற்ற விவகாரம் குறித்த வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், சட்டமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக சட்டமன்றம் மீண்டும் அமளியாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.