கேரள மாநிலத்தில் இன்னும் இரு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.
அங்கு மொத்தம் 140 தொகுதிகள் உள்ளன.
முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் இந்த தேர்தலில் 100 இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
100 தொகுதிகள் எவை என்பதை அந்த கட்சி தீர்மானித்து விட்டது. அந்த தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களை சேர்ந்த அரசியல் கருத்து கணிப்பாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
தொகுதிக்கு மூன்று பேரை வேட்பாளர்களாக தேர்வு செய்து, காங்கிரஸ் மேலிடத்தில் கொடுத்துள்ளனர். அதில் ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, இப்போது கேரளா முழுவதும் ‘ஐஸ்வர்யா கேரளா யாத்திரை’ என்ற பெயரில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
யாத்திரை முடிவில், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
– பா. பாரதி