கோரக்பூர்

கோரக்பூர் மருத்துவமனைக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்படும் என ம பி காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் கூறியுள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் இரண்டாம் முறையாக மத்தியபிரதேச காங்கிரசார் கோரக்பூர் குழந்தைகள் மரணத்துக்கு நீதி கேட்டும்,  முதல்வரின் ராஜினாமாவைக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   ம பி காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் தலைமையில் கோஷங்கள் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்து பின் விடுதலை செய்தனர்.

விடுதலைக்குப் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த ராஜ் பப்பர் கூறியதாவது :

”இந்த மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வரும், சுகாதார அமைச்சரும் ராஜினாமா செய்யுவரை எங்களின் போராட்டம் நிற்காது.    பி ஆர் டி மருத்துவமனைக்கு காங்கிரஸ் சார்பில் 10 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்படும்.  இது நோயால் அவதிப்படும் குழந்தைகளுக்கு உதவியாக இருக்கும்.   இது முதல்வரின் சொந்த ஊராக இருந்தும் கூட சுத்தம் சுகாதாரமின்றி உள்ளது.   இதே நிலை நீடித்தால் காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களே வந்து சுத்தம் செய்து அரசின் இயலாமையை உலகுக்கு காட்டுவார்கள்.   காங்கிரஸ் சார்பில் மருத்துவ மையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு தினமும் ஆறு மணி நேரம் பணி புரியும்,  கோரக்பூர் மக்களுக்கு எல்லா மருத்துவ உதவிகளையும் இந்த மையம் செய்யும்” என தெரிவித்தார்.

இன்று கோரக்பூருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருவார் என சொல்லப்படுகிறது.