டெல்லி:
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, டெல்லி மேம்பாலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தொழிலாளர்களுடன் சாலையில் அமர்ந்து அவர்களிடம் கனிவுடன் குறைகளை கேட்டறிந்தது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வலியுறுத்தி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை மத்திய மாநில அரசுகள் செய்யாததால், பலர் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் அங்குள்ள சுக்தேவ் விஹார் மேம்பாலம் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை இன்று சந்தித்த ராகுல்காந்தி, அவர்களின் குறைகளை அவர்களுடன் சாலையில் அமர்ந்து கேட்டறிந்தார்.
ராகுலின் இந்த திடீர் நடவடிக்கை புலம்பெயர் தொழிலாளர்களிடம் பெரும் வரவேற்பையும், ஆறுதலையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Patrikai.com official YouTube Channel