டில்லி,

கில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, வரும் செப்டம்பர் 11 ம் தேதி பிரபல அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற இருக்கிறார்.

உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழங்களில் ஒன்றான கலிபோர்னியா பல்கலைக்கழகம் – பெர்க்லி (University of Calfornia, Berkeley), ஐக்கிய அமெரிக்காவின் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.

இந்த பல்கலைக்கழகத்தில் அகில இந்தியா காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்.

அவர், ‘சமகால இந்தியாவின் பார்வையும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு முன்னோக்கி செல்லும் பாதையும்‘  என்ற தலைப்பில் உரையாற்று வார் என்று பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

மேலும், 70களில் இந்தியா முன்னேற்ற பாதையில் என்ற தலைப்பிலும் விரிவுரை ஆற்ற இருப்பதாக பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம், பெர்க்லி ஆராய்ச்சி மற்றும் சமகாலத்திய இந்திய நிகழ்ச்சித்திட்டத்தின் தெற்காசிய ஆய்வுகள் இன்ஸ்டிடியூட் ஆஃப் தெற்காசிய ஆய்வுகள் நிறுவனம் பல்கலைக்கழகம் அதன் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக 2013முதல் பதவியேற்று மறு சீரமைப்பிற்கு தலைமை தாங்கி வருவதாகவும், அவரது இந்தியா மீதான சமகாலத்து பிரதிபலிப்புகள் குறித்து பல்கலைக்கழகத்தில் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே  1949ம் ஆண்டு ராகுலின் தாத்தா ஜவஹர்லால் நேரு, பெர்க்லி பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், பெர்க்கிலி பல்கலைக்கழகத்தில் ராகுல் உரையாற்றுவதற்கு, அங்கு படித்து வரும் சீக்கிய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், ராகுலை பேச அழைத்திருப்பதை திரும்ப பெறுமாறும் பல்கலைக்கழகத்தை வலியுறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.